தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல் – தேர்தல் ஆணையம்

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று தேர்தல் ஆணையர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
வாக்காளர்களின் பாதுகாப்பு தான் முக்கியமானதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம்.
தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார், நியமனம்.
வேட்பாளர் உடன் 4 பேர் மட்டுமே தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி
வாக்குப்பதிவு மையங்களில் இருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்.
தமிழகத்தில் தேர்தல் செலவு அதிக அளவில் நடைபெறும் என்பதால் முக்கியாமாக கருதப்படுகிறது. விழாக்கள்,பண்டிகைகள்,தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் அதுபற்றி விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும்.