மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு மீண்டும் பாரபட்சமில்லாமல் அனைத்து கட்சி கூட்டத்தை மறுபடி கூட்ட வேண்டும். ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும். அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்து மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட்டை நயவஞ்சமாக திறப்பதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (29-04-2021) தூத்துக்குடியில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள், இயக்கங்கள் உட்பட அனைவரும் ஆதரவு தரும்படி கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *