ஜும் செயலியில் புதிய அம்சங்கள்.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான இணைய உரையாடல் (வீடியோ வெப்பினர்) செயலியான “ஜும்” புதிய அப்டேட்டுகளில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் சிறு நிறுவனங்கள் முதல் பெரும் கார்ப்பரேட்கள் வரை அனைவரையும் இணைத்துள்ளது இந்த ஜூம் செயலி. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே அனைவரிடமும் கைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முடிந்தது. தற்போது, இந்த செயலியில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதில், வீடியோ மூலம் தொடர்பு கொள்பவர்கள் தங்களது பின் திரையை மாற்றிக் கொள்ளலாம். மேலும், இதில், நாட்காட்டி இணைக்கப்பட்டுள்ளது. சிறு சிறு பிழைகளை நீக்கப்பட்டுள்ளது.

பின் திரை மாற்றத்திற்கு உங்களது கைபேசியில் உள்ள படங்களை கூட பயன்படுத்த முடியும். தேடலுக்கான வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் சார்ட் செய்து கொள்ளும் வசதி இருந்த நிலையில், தற்போது அதில் அடித்தவை, படிக்காதவை என பிரிக்க முடியும். 50 ரூம்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை இலவசமாக பயன்படுத்தினால் 100 பேர் வரை வீடியோ கான்பிரன்ஸ் ரூம்களை உருவாக்க முடியும். 40 நிமிடங்கள் வரை மட்டுமே அனுமதி. ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டால் தடையில்லாமல் பேசலாம்.

முன்னதாக, இந்த செயலியால் பல சட்ட விரோத நடவடிக்கைகள் நடப்பதாக புகார்கள் எழுந்தது. ஆனால், ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பெரிதும் உதவிய செயலிகளில் முதலிடத்தில் இருந்தது ஜூம் மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *