MR.360 டிவிலியர்ஸ் சிக்சர் மழை..! பெங்களூர் அணி வெற்றி.

ஐபிஎல் 33ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்களை இழந்து 177 ரன்களும், பெங்களூர் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்களும் எடுத்தது.
178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் ஓரளவுக்குச் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். தேவ்தத் படிக்கல் 35 ரன்களும், ஆரோன் ஃபிஞ்ச் 14 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் டிவிலியர்ஸ் அதிரடி காட்டத் தொடங்கி சிக்ஸர் மழை பொழிந்தார். இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 179 ரன்களை எடுத்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *