பட்டாசு ஆலை  விபத்தில் தாய் தந்தையை இழந்த சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்கிய அமைச்சர்.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய் தந்தையை இழந்த நடுச்சூரங்குடியை சேர்ந்த சிறுமி நந்தினியின் படிப்புச் செலவுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி தனது சொந்த நிதியில் ரூ.5 லட்சம் வழங்கினார்.

சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 21 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இதில் நடுச்சூரங்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ்-செல்வி தம்பதிகளும் உயிரிழந்தனர். இதனால் அவர்களது ஒரே மகள் நந்தினி(12) நிர்கதியானார்.

இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அச்சிறுமியின் கல்வி செலவுக்காக ரூ.5 லட்சத்தை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *