கடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி

புரட்டாசி 4வதுசனிக்கிழமையையொட்டி சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் சுவாமிக்கு உகுந்தநாள் என்பதால் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதையொட்டி சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலில் 4வது புரட்டாசி சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி காலை பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீபெருமாள்சுவாமி, ஸ்ரீஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று நெய் விளக்கு ஏற்றி சுவாமியை வழிப்பட்டனர். இரவு கடைசி சனிக்கிழமைதோறும் ஸ்ரீஆஞ்சநேயருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது. இதில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளாக பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *