உலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..?

உலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட மோசமான நிலையில் இந்தியா உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி உள்ளிட்ட பல கொள்கையால் நாடு பொருளாதார மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் வறுமை வேலையில்லாத்திண்டாட்டம் என சாமானிய மக்கள் கடும் சவாலை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் என்ற அமைப்பு உலக பட்டினி குறியீடு அறிக்கையை  வெள்ளியன்று  வெளியிட்டுள்ளது. 
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், உலக மக்களின் பசியைப் போக்கி முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், மக்களின் உணவுப் பற்றாக்குறையை மதிப்பிட்டு அதற்கான விழிப்புணர்வு மற்றும் தீர்வை அறிவிப்பதற்காகவும் உலகில் உள்ள 117 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ‘உலக அளவிலான பட்டினி மதிப்பீடு’ என்ற பெயரில் ஒரு பட்டியலை வெளியிடப்படுகிறது.
இதில் குழந்தைகளுக்குத் தேவையான சத்துள்ள சரிவிகித உணவு கிடைக்கிறதா என்றும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயதிற்கு ஏற்ப எடை மற்றும் உயரம்  ஆகியவற்றை
ஆய்வு செய்து, குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவற்றை வைத்தும் இந்த பட்டினி குறியீடு கணக்கிடப்படும்.

அதில் உலகப் பட்டினிக் குறியீட்டு நாடுகள் 107-ல் இந்தியா 94-ம் இடத்தில் உள்ளது. அண்டைநாடுகளான வங்கதேசம் 75ம் இடத்திலும் பாகிஸ்தான் 88ம் இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா மோசமாக உள்ளது. இந்த பட்டியல் மோடி அரசின் சாதனை என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *