சாத்தான்குளம் வழக்கு- மேலும் 3 பேரை காவலில் எடுக்க சிபிஐ மனு..

சாத்தான்குளம் வழக்கு- மேலும் 3 பேரை காவலில் எடுக்க சிபிஐ மனுத்தாக்கல்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 10 போலீசார் சிபிசிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது.

மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள சிபிஐ, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளது.

ஏற்கனவே ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட முதலில் கைதான 5 போலீசாரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *