தூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நாளை (29.04.2021) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் நாளை (29.04.2021) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு

தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை வார்டு எண்: 57 தங்கமணி நகர் 3-வது தெரு, வார்டு எண்: 17 புனித மரியன்னை காலனி (அம்மா உணவகம் அருகில்), வார்டு எண்: 6 அம்பேத்கர் நகர் (கோவில் அருகில்), வார்டு எண்: 30 வண்ணார் தெரு (மாநகராட்சி பள்ளி), வார்டு எண்: 29 விக்டேரியா தெரு (விக்டோரியா மெயின் ரோடு) ஆகிய பகுதிகளிலும்,

காலை 11 மணிமுதல் 1 மணி வரை வார்டு எண்: 54 தங்கம்மாள்புரம் (தங்கம்மாள்புரம் பள்ளி), வார்டு எண்: 17 அய்யர்விளை (கோவில் அருகில்), வார்டு எண்: 4 ஸ்டேட் பேங்க் காலனி முதல் தெரு, வார்டு எண்: 49 கால்டுவெல்காலனி 4-வது தெரு, வார்டு எண்: 23 அய்யலுத்தெரு, மெயின்ரோடு ஆகிய பகுதிகளிலும்,

பகல் 2 மணி முதல் 4 மணி வரை வார்டு எண்: 60 தொழிலாளர் காலனி, வார்டு எண்: 17 கோவில்பிள்ளை விளை (சந்தனமாரியம்மன் கோவில் அருகில்), வார்டு எண்: 5 கே.டி.சி நகர் (பிள்ளையார் கோவில் அருகில்), வார்டு எண்: 50 கோர்ட்ஸ் நகர் (கமலா ஸ்டோர் எதிரில்), வார்டு எண்: 22 நாராயணசெட்டித்தெரு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.

கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை பாரதிநகர் பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை முகமதுசாலியபுரம் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடராஜபுரம், செண்பகவள்ளிநகர் பகுதியிலும், காயல்பட்டிணம் நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை சிவன்கோவில் தெரு பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை வீரசடச்சியம்மன் கோவில் தெரு பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை ஓடக்கரை பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.

ஊராட்சி பகுதிகளில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை தாளமுத்துநகர், பண்டாரவிளை, கீழசெக்காரக்குடி, குருக்காட்டூர், கல்லாமொழி, சிதம்பராபுரம், நாலாட்டின்புதூர், நாச்சியார்புரம், கழுகாசலபுரம், கலப்பைபட்டி, சக்கிலிப்பட்டி ஆகிய பகுதிகளிலும், 11 மணிமுதல் 1 மணி வரை வடக்கு சோட்டையன் தோப்பு, பண்டாரவிளை பங்களா, சென்னல்பட்டி, பெருமாள்குளம், மாதவன்குறிச்சி, செக்கடிவிளை, இடைசெவல், காலாம்பட்டி, கே.சுப்பிரமணியபுரம், கைலாசபுரம், கீழநாட்டுக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும், பகல் 2 மணிமுதல் 4 மணி வரை செந்தியம்பலம், கண்ணாண்டிவிளை, கீழ புத்தனேரி, மாசித்தெரு, ஆழ்வார்திருநகரி, கொட்டங்காடு, சொக்கலிங்கபுரம், வெள்ளாளன் கோட்டை, என்.புதுப்பட்டி, வேப்பன்குளம், தாப்பாத்தி ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *