அண்ணா பல்கலை கழகம் இரண்டு பல்கலைகழகமாக பிரிப்பு..!

ஆராய்ச்சிகளை அதிகப்படுத்தும் வகையில், சென்னை அண்ணா பல்கலை, இரண்டு பல்கலைகளாக பிரிக்கப்பட்டு, புதிதாக அண்ணா தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலை துவக்கப்படுகிறது.இதற்கான இரண்டு  சட்ட திருத்த மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தாக்கல் செய்தார்.அப்போது உரையாற்றிய அமைச்சர், கடந்த, 1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, அண்ணா பல்கலை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. அண்ணா பல்கலையானது, 13 உறுப்பு கல்லூரிகள், கிண்டி பொறியியல், கல்லூரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் இணைப்பு கல்லூரிகளுடன் செயல்படுகிறது.மாநிலம் முழுவதும் உள்ள இணைப்பு கல்லூரிகளை, சென்னையில் இருந்து நிர்வகிப்பது பல்கலையின் அதிக நேரத்தையும், ஆற்றலையும் எடுத்துக் கொள்கிறது.எனவே, இணைப்பு கல்லூரிகளை ஒன்றாக நிர்வகிக்கும் வகையில், அண்ணா பல்கலை என்றும், தற்போதுள்ள பல்கலையை, அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலை என்றும் மாற்றியமைக்க அரசு முடிவு செய்துள்ளது.கிண்டி பொறியியல், கல்லூரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு பள்ளி, குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை, இந்த பல்கலையில் அடங்கும். அந்த கல்லூரி பேராசிரியர்களில் ஒருவர், ஆட்சி மன்ற குழுவில் இடம் பெறுவார்.பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளில் முன்னேற்ற வழிகளை காணும் வகையில், அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலை உருவாக்கப்படுகிறது.புதிதாக அமைய உள்ள அண்ணா பல்கலையானது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் இணைப்புகளை கொண்டதாக இருக்கும்.அண்ணாமலை பல்கலை. உள்ள அண்ணாமலை நகரில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும், இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இந்த சட்ட திருத்த மசோதா மீது நடந்த விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, “நிர்வாக வசதிக்காகத் தான் முந்தைய திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகம் ஐந்தாக பிரிக்கப்பட்டது. பின்னர் அதை இணைத்த அதிமுக மீண்டும் இரண்டாக பிரிப்பதை வரவேற்பதாகதெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *