டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்த்துறையை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருகிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

விவசாய விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்திட கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் பேரணியில் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டு வீசி விவசாயிகளை கொல்ல முயன்ற டெல்லி காவல்த்துறையையும் ஏவிய மத்திய அரசயையும் கண்டித்து உள்துறை அமித்ஷவை பதிவி விலக கோரியும் , மத்திய அரசு மற்றும் காவல்த்துறையின் அரஜாக போக்கினை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருகிணைப்பு குழு சார்பில் யா.ஒத்தக்கடையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் வி.அடக்கிவீரணன், மாவட்டத் துணைச் செயலாளர் பி.தனசேகரன் ஒன்றியச் கே.சேகர், போராட்ட ஒருகிணைப்பு குழு கன்வீன்ர் ஜி.சந்தானம், சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ், குமரேசன் மக்கள் அதிகாரம் சரவணன், புரட்சி கர இளைஞர் முன்னணி பிராபகரன் ஆகியோர் பேசினார்கள். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் வாழ்த்தி பேசினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் வி.பிச்சைராஜன், எம்.செளந்தர், செ.ஆஞ்சி, மணிகிருஷ்ணன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *