அருப்புக்கோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு : 3 பேர் கைது.

அருப்புக்கோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் கடந்த பிப்.,20 அன்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி உள்ளனர்.

சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்தவுடன் மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து பந்தல்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வழககுப் பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் அருப்புக்கோட்டை அருகே ராமநாயக்கன்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் மூவரும் சேர்ந்து சேதுராஜபுரம் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த செல்வம் (35), அலெக்ஸ்பாண்டியன் (29), முத்துக்குமார் (25) ஆகியோர் என தெரிய வந்தது. பின்பு, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *